சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் தடவையாக வளர்ச்சியடைந்த கீரையை உண்ட விண்வெளிவீரர்கள்!!

313

nasa_3சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்தில் தங்­கி­யுள்ள ஜப்­பா­னிய விண்­வெ­ளி­வீ­ர­ரான சிமியா யுயியும் அமெ­ரிக்க விண்­வெ­ளி­வீ­ரர்­க­ளான ஸ்கொட் கெல்லி மற்றும் கஜெல் லின்ட்­கிரென் ஆகியோர் முதல் தட­வை­யாக அந்த விண்­வெ­ளி­நி­லை­யத்தில் வளர்ச்­சி­ய­டையச் செய்­யப்­பட்ட கீரை வகையை உண்­பதை படத்தில் காணலாம்.

கீரை வகை தாவ­ர­மான லெட்ரூஸ் தாவரம் கடந்த ஜூலை மாதம் சர்­வ­தேச விண்­வெ­ளி­நி­லை­யத்­தி­லுள்ள “வெஜ்1” என்­ற­ழைக்­கப்­படும் விசேட தாவர பரி­சோ­தனை முறை­மையில் வளர்ச்­சி­ய­டையச் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

எதிர்­கா­லத்தில் செவ்வாய் போன்ற தூர கிர­கங்­க­ளுக்கு நீண்ட கால பய­ணங்கள் மேற்­கொள்­ளப்­படும் பட்­சத்தில் அந்தப் பய­ணங்­களில் பங்­கேற்கும் விண்­வெ­ளி­வீ­ரர்­களின் உணவுத் தேவைப்­பா­டு­க­ளுக்கு உதவும் முக­மா­கவே சர்வதேச விண்வெளி நிலை­யத்­தி­லான இந்த பரீட்­சார்த்த லெட்ரூஸ் செய்கை மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.