தன்னை விடவும் மேம்­ப­டுத்­தப்­பட்ட ரோபோக்­களை சுய­மாக உரு­வாக்கும் ரோபோ முறைமை உரு­வாக்கம்!!

375

roboதன்னைத் தானே மேம்­ப­டுத்தி தனது செயற்­பா­டு­களை விருத்தி செய்யக் கூடிய வல்­ல­மையைக் கொண்ட ரோபோ முறை­மை­யொன்றை பொறி­யி­ய­லா­ளர்கள் உரு­வாக்­கி­யுள்­ளனர்.இதன் பிர­காரம் உரு­வாக்­கப்­பட்­டுள்ள ரோபோ கர­மா­னது மனித தலை­யீடு இன்றி தன்னை விடவும் முன்­னேற்­ற­க­ர­மாக செயற்­ப­டக்­கூ­டிய ரோபோக்­களை உரு­வாக்கும் வல்­ல­மையைக் கொண்­ட­தாகும்.

பிரித்­தா­னிய கேம்­பிரிட்ஜ் மற்றும் சுவிட்­ஸர்­லாந்தின் சூரிச் பிராந்­தி­யங்­களைச் பொறி­யி­ய­லா­ளர்­களால் இந்த ரோபோ முறைமை உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

ரோபோ­வொன்று தன்னை விடவும் முன்­னேற்­ற­க­ர­மான ரோபோக்­களை சுய­மாக உரு­வாக்கும் இந்தத் தொழில்­நுட்­பத்தால் இயந்­தி­ரங்கள் மனி­தர்­களை விஞ்சும் நிலை ஏற்­படும் என தற்­போது அஞ்ச வேண்­டி­ய­தில்லை எனவும் தம்மால் உரு­வாக்­கப்­பட்­டுள்ள ‘தாய்’ ரோபோ­வான ரோபோ கரத்தைப் பயன்­ப­டுத்தி பிளாஸ்டிக் மற்றும் சிறிய மோட்டார் இயந்­தி­ரத்தைக் கொண்ட ஆரம்ப கட்ட ‘குழந்தை’ ரோபோ­வொன்­றையே உரு­வாக்­கி­யுள்­ள­தா­கவும் அந்தப் பொறி­யி­ய­லா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

இதன்­போது தாய் ரோபோ, குழந்தை ரோபோவின் இயக்கங்களை சுயமாக மதிப்பீடு செய்து அதனை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.