வவுனியாவில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு!!(படங்கள்)

623

வவுனியா தாலிக்குளம் பகுதியில் இன்று (14.08.2015) மாலை 4 மணியளவில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா தாலிக்குளம் பகுதியில் வசித்துவந்த வேலாயுதம் ஜெயராணி என்ற 54 வயதுடைய குடும்பப் பெண்ணே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

அயல் வீட்டிற்குச் செல்லும் மின்சாரக் கம்பி அறுந்து வேலியின் மீது விழுந்துள்ளது. குறித்த பெண் கம்பி மீது கைவைத்ததைத் தொடர்ந்து மின்சாரம் தாக்கி வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-பிராந்திய செய்தியாளர்-

P1190308 P1190309 P1190310