வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் வைத்து அகில இலங்கை தமிழர் மகாசபையின் முதன்மை வேட்பாளார் இராசதுரை செல்வராணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரிவித்த இராசதுரை செல்வராணி..
நேற்றையதினம் (13.08.2015) மாலை 6 மணியளவில் தேர்தல் பிரச்சாரத்தினை முடித்துவிட்டு தாம் தமது ஆதரவாளர்களுடன் வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்ததாகவும் தமது வாகனத்தினை பின்தொடர்ந்து வந்த இனந்தெரியாத நபர்கள் தாம் பயணம்செய்த வாகனத்தினை இடைமறித்து தாக்குதல் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் இத் தாக்குதல் குறித்து தாம் ஓமந்தை பொலிசாரிடம் முறையிட்டபோதும் தாக்குதலை மேற்கொண்டவர்களை வவுனியாவிலிருந்த அனுராதபுரம் வரை பாதுகாப்புடன் வெளியேற்றியதாகவும் ஆனால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட எனக்கும் எனது ஆதரவாளர்களுக்கும் பொலிசார் எவ்விதப் பாதுகாப்பும் வழங்கவில்லை எனவும் தெரிவித்தார்.
-பிராந்திய செய்தியாளர்-







