இது துடுப்பாட்ட வீரர்களுக்கு ஒரு பாடம்! கோலி ஆவேசம்!!

412

1224556051Untitled-1இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி குறைந்த ஓட்டங்களையே துரத்த முடியாமல் 63 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. வெற்றிப் பாதையில் இருந்த இந்திய அணி, துடுப்பாட்ட வீரர்களின் சொதப்பலால் மண்ணைக் கவ்வ நேரிட்டது. அதேசமயம், தலைவர் கோலியின் ஐந்து பந்துவீச்சாளர் பார்முலா குறித்த விமர்சனமும் எழுந்துள்ளது.

ஆனால், தனது ஐந்து பந்துவீச்சாளர் பார்முலாவை நியாயப்படுத்திய கோலி, துடுப்பாட்ட வீரர்கள் தங்கள் கடமையை செய்ய தவறிவிட்டதாக குறைகூறினார்.

“5 பந்துவீச்சாளர்கள் மற்றும் அதைவிட அதிக துடுப்பாட்ட வீரர்களை தேர்வு செய்ததால், கூடுதலாக ஒரு துடுப்பாட்ட வீரர் இருந்திருக்கலாம் என்று கூற மாட்டேன். 12 வீரர்களுடன் விளையாட முடியாது. 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றும் யுக்தியுடன் 5 பந்துவீச்சாளர்களை நான் தேர்வு செய்திருந்தால், துடுப்பாட்ட வீரர்கள் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டும். ஆனால், இன்று நாம் அதை செய்யவில்லை. அதேசமயம் பந்துவீச்சாளர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்தனர்.

இதற்காக நான் எந்த சமாதானத்தையும் கூற மாட்டேன். துடுப்பாட்ட வீரர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். இந்த தோல்வி துடுப்பாட்ட வீரர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்” என்று வெளிப்படையாக பேசினார் கோலி.