
வவுனியா பூந்தோட்டம் சாந்தசோலை செல்லும் வீதியில் கராஜ் வைத்து ஒட்டுத் தொழில் செய்து வந்த கடை உரிமையாளரான இரண்டு பிள்ளைகளின் தந்தை ரவிச்சந்திரன் (48) மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
இன்று 16.08.2015 காலை 07.30 மணியளவில் தனது வியாபார நிலையத்தினை திறந்து தனது கடமையினை செய்ய ஆயத்தமானபோதே மின்சார ஒழுக்கு ஏற்பட்டு வியாபார நிலையத்திலேயே இவர் உயிரிழந்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவரின் மனைவியும் அதிர்ச்சியடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.
மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
-பிராந்திய செய்தியாளர்-





