8 ஆவது பாராளுமன்ற தேர்தல் இன்று!!

1354

Web-tempppprஎட்­டா­வது பாரா­ளு­மன்­றத்­துக்கு பிர­தி­நி­தி­களை தெரிவுசெய்­வ­தற்­கான தேர்தல் வாக்­க­ளிப்பு இன்று திங்­கட்­கி­ழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணி­வரை நாடு முழு­வதும் நடை­பெ­ற­வுள்­ளது. அந்­த­வ­கையில் இந்த தேர்தல் வாக்­க­ளிப்பில் மொத்­த­மாக ஒரு கோடியே 50 இலட்­சத்து 44 ஆயிரத்து 490 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர்.

தேர்­தலில் 6,151 வேட்­பா­ளர்கள் போட்­டி­யி­டு­கின்ற நிலையில் 225 உறுப்­பி­னர்கள் எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்­துக்குத் தெரிவு செய்யப்­ப­ட­வுள்­ளனர். நாடு முழு­வதும் 12,314 வாக்­க­ளிப்பு நிலை­யங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ள­து.

அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 3,653 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 2498 வேட்­பா­ளர்­களும் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்­றனர். தேர்­த­லுக்­கான பிர­சாரப் பணிகள் யாவும் கடந்த வெள்ளிக்­கி­ழமை நள்­ளி­ரவு 12 மணி­யுடன் முடி­வுக்கு வந்­தன.

அடை­யாள அட்டை அவ­சியம்

வாக்­க­ளிப்பு நிலை­யத்­துக்கு வாக்­கா­ளர்கள் செல்­லும்­போது கட்­டாயம் ஆள் அடை­யா­ளத்தை உறு­தி­ப­டுத்தும் ஆவணம் ஒன்றை எடுத்துச் செல்­ல­வேண்டும். தேசிய அடை­யாள அட்டை, ஓய்­வூ­திய அடை­யாள அட்டை, வயது வந்­தோ­ருக்­கான அடை­யாள அட்டை, செல்­லு­ப­டி­யாகும் கட­வுச்­சீட்டு, சாரதி அனு­மதி பத்­திரம், மத குரு­மார்­க­ளுக்­கான அடை­யாள அட்டை மற்றும் கடந்த ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு தேர்தல் திணைக்­க­ளத்­தினால் வழங்­கப்­பட்ட தற்­கா­லிக அடை­யாள அட்டை என்­பன கட்­டா­ய­மாகும். ஆள் அடை­யா­ளத்தை உறு­தி­ப­டுத்தும் ஆவ­ண­மின்றி வாக்­க­ளிக்க முடி­யாது.

வாக்­க­ளிக்கும் முறை

வாக்­கா­ளர்கள் காலை வேளை­யி­லி­லேயே வாக்­க­ளிப்பு நிலை­யத்­துக்கு சென்று வாக்­க­ளிப்பில் ஈடு­ப­ட­வேண்டும். வாக்­கா­ளர்கள் வாக்­க­ளிப்பு நிலை­யத்தில் அதி­கா­ரி­க­ளினால் வழங்­கப்­படும் வாக்குச் சீட்டில் தாம் விரும்­பிய கட்­சியின் சின்­னத்­துக்கு அல்­லது சுயேச்சைக் குழுவின் சின்­னத்­துக்கு முன்னால் புள்­ள­டி­யி­ட­வேண்டும். அதன் பின்னர் விரும்­பினால் மூன்று இலக்­கங்­க­ளுக்கு விருப்பு வாக்­கு­களை அளிக்­கலாம்.

அவ்­வாறு செய்­து­விட்டு வாக்குச் சீட்டை நன்­றாக மடித்து அங்கு வைக்­கப்­பட்­டுள்ள பெட்­டியில் இட­வேண்டும். கட்­சியின் சின்னம் அல்­லது சுயேச்சைக் குழுவின் சின்­னத்தின் முன்னால் புள்­ள­டி­யிட்­டு­விட்டு வேண்டும் எனில் விருப்பு வாக்கை அளிக்­காமல் வரலாம். ஆனால் கட்­சிக்கோ சுயேச்சை குழு­வுக்கோ வாக்­க­ளிக்­காமல் விருப்பு வாக்­க­ளித்தால் அது நிரா­க­ரிக்­கப்­பட்­டு­விடும். எனவே வாக்­கா­ளர்கள் உரிய முறையில் வாக்­க­ளிப்­பது அவ­சி­ய­மாகும்.

2 இலட்சம் அரச ஊழி­யர்கள் பணியில்

தேர்தல் செயற்­பா­டு­க­ளுக்­காக சுமார் ஒரு இலட்­சத்து 95 ஆயிரம் அரச ஊழி­யர்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். வாக்­க­ளிப்பு நட­வ­டிக்­கை­களில் 125000 அரச ஊழி­யர்­களும் வாக்கு எண்ணும் செயற்­பா­டு­களில் 75000 அரச ஊழி­யர்­களும் ஈடு­ப­ட­வுள்­ளனர். இதற்­கான ஏற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன. தேர்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள அரச அதி­கா­ரிகள் நேற்­றைய தினமே தமது பணி­களை ஆரம்­பித்­துள்­ளனர். குறிப்­பாக வாக்­க­ளிப்பு நிலை­யங்­களில் பணிக்கு அமர்த்­தப்­பட்­டுள்ள அரச ஊழி­யர்கள் நேற்று மாலையே தமது வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கு சென்­று­விட்­டனர்.

பாது­காப்பு

8 ஆவது பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான பாது­காப்பு பணிகள் அனைத்தும் பொலிஸ் தலை­மை­ய­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. அதன்­படி நாட­ளா­விய ரீதியில் உள்ள 49 பொலிஸ் வலை­யங்­களின் கீழ் உள்ள 438 பொலிஸ் நிலை­யங்­க­ளையும் உள்­ள­டக்கி இந்த பாது­காப்பு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. அந்­த­வ­கையில் 70549 பொலி­ஸாரும் 4225 பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் பாது­காப்பு கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர்.

வாக்­க­ளிப்பு நிலைய பாது­காப்பு

ஒரு வாக்­க­ளிப்பு நிலை­யத்­துக்கு இரு பொலிஸார் வீதம் பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. அதன்­படி வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கு மட்டும் 24798 பொலிஸார் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர். அத்­துடன் 2885 நட­மாடும் பாது­காப்புக் குழுக்­களும் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. . இந்த குழுக்கள் நேற்று தமது கட­மை­களை ஆரம்­பித்­த­துடன் 18 ஆம் திகதி வரை­யிலும் கட­மையில் இருப்­ப­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

கண்­கா­ணிப்பு

வாக்­க­ளிப்பு செயற்­பா­டு­களை உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு கண்­கா­ணிப்­பா­ளர்கள் கண்­கா­ணிக்­க­வுள்­ளனர். பொது­ந­ல­வாய தேர்தல் கண்­கா­ணிப்பு குழு ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் தேர்தல் கண்­கா­ணிப்பு குழு மற்றும் தெற்­கா­சிய தேர்தல் கண்­கா­ணிப்பு அதி­கா­ர­சபை போன்ற சர்­வ­தேச கண்­கா­ணிப்பு நிறு­வ­னங்கள் கண்­கா­ணிப்பில் ஈடு­ப­டு­கின்­றன. பொது­ந­ல­வாய தேர்தல் கண்­கா­ணிப்பு குழுவின் 9 அதி­கா­ரிகள் தேர்தல் கண்­கா­ணிப்பில் ஈடு­ப­டு­கின்­றனர். உள்­நாட்டு கண்­கா­ணிப்பை பொறுத்­த­வரை பெப்ரல் அமைப்பு 12,314 நிலைகொள் தேர்தல் கண்­கா­ணிப்­பா­ளர்­களை பணியில் ஈடு­ப­டுத்­து­கின்­றது.

வாக்­க­ளிப்பு மேற்­பார்வை

இதே­வேளை தேர்தல் திணைக்­க­ளத்­தி­னதும் மேற்­பார்வை அதி­கா­ரிகள் தேர்தல் வாக்­க­ளிப்பை மேற்­பார்வை செய்­ய­வுள்­ளனர். அதா­வது ஐந்து அல்­லது ஆறு வாக்­க­ளிப்பு நிலை­யங்­களை ஒரு அதி­காரி பார்­வை­யி­டுவார். 16 மற்றும் 17 ஆம் திக­தி­களில் தேர்தல் திணைக்­கள அதி­கா­ரிகள் மேற்­பார்வை செயற்­பாட்டில் ஈடு­ப­டு­வார்கள்.
கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் விசேட வர்த்­த­மானி அறி­வித்தல் ஊடாக ஏழா­வது பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­டது. அதன் பின்னர் ஜூலை 31 ஆம் தித­கி­யி­லி­ருந்து ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி வரை வேட்பு மனுத்­தாக்­கல்கள் கோரப்­பட்­டன.

பிர­தான கட்­சிகள் களத்தில்

இம்­முறை தேர்தல் களத்தில் ஐக்­கிய தேசிய கட்சி, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி, மக்கள் விடு­தலை முன்­னணி, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, ஜன­நா­யகக் கட்சி உள்­ளிட்ட கட்­சிகள் பிர­தா­ன­மாக போட்­டி­யி­டு­கின்­றன. பல்­வேறு சிறிய கட்­சிகள் பிர­தான கட்­சி­க­ளுடன் இணைந்து போட்­டி­யி­டு­கின்­றன

22 மாவட்­டங்­களில்

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி மற்றும் ஐக்­கிய தேசியக் கட்சி என்­பன நாட்டின் 22 தேர்தல் மாவட்­டங்­க­ளிலும் போட்டி யிடு­கின்­றன. அத்­துடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் ஊடாக வடக்கு கிழக்கு மாகா­ணங்­களின் ஐந்து தேர்தல் மாவட்­டங்­க­ளிலும் போட்­டி­யி­டு­கின்­றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் போட்­டி­யி­டு­கின்­றது. தமிழர் விடு­தலை கூட்­ட­ணியும் திகா­ம­டுல்ல மாவட்டம் தவிர்ந்த வடக்கு கிழக்கு மாவட்­டங்­க­ளிலும் கொழும்பு மாவட்­டத்­திலும் போட்­டி­யி­டு­கின்­றது.

196 பேர் நேர­டி­யாக தெரிவு

தேர்­தலில் மாவட்­டங்­களின் ரீதியில் 196 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ள­துடன் 29 பேர் கட்­சி­க­ளுக்கு கிடைக்­கின்ற வாக்­கு­களின் அடிப்­ப­டையில் தேசிய பட்­டியல் மூலம் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். அந்­த­வ­கையில் 225 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். நாட்டில் 22 தேர்தல் மாவட்­டங்கள் உள்­ளன.

கொழும்பு மாவட்டம்

கொழும்பு மாவட்­டத்தில் 1586598 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 19 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 462 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 330 வேட்­பா­ளர்­க­மாக 792 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

கம்­பஹா மாவட்டம்

கம்­பஹா மாவட்­டத்தில் 1637537 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 18 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 252 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 336 வேட்­பா­ளர்­க­ளு­மாக 588 பேர் தேர்தல் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

களுத்­துறை மாவட்டம்

களுத்­துறை மாவட்­டத்தில் 897349 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 10 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 221 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 65 வேட்­பா­ளர்­க­ளு­மாக 286 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

கண்டி மாவட்டம்

கண்டி மாவட்­டத்தில் 1049160 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 12 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 255 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 105 வேட்­பா­ளர்­க­ளு­மாக 360 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

மாத்­தளை மாவட்டம்

மாத்­தளை மாவட்­டத்தில் 379675 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 5 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 112 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 64 வேட்­பா­ளர்­க­ளு­மாக 176 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

நுவ­ரெ­லியா மாவட்டம்

நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் 534190 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 8 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 154 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 99 வேட்­பா­ளர்­க­ளு­மாக 253 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

காலி மாவட்டம்

காலி மாவட்­டத்தில் 819666 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 10 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் 14 அர­சியல் கட்­சிகள் மற்றும் 17 சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 221 வேட்­பா­ளர்­களும் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 10 தேரர்­களும் நான்கு பெண்­களும் வேட்­பா­ளர்­க­ளாக போட்­டி­யி­டு­கின்­றனர்.

மாத்­தறை மாவட்டம்

மாத்­தறை மாவட்­டத்தில் 623818 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 8 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 143 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 44 வேட்­பா­ளர்­க­ளு­மாக 187 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

அம்­பாந்­தோட்டை

அம்­பாந்­தோட்டை மாவட்­டத்தில் 462911 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 7பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 120 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 50 வேட்­பா­ளர்­க­ளு­மாக 170 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

யாழ்ப்­பாணம்

யாழ்ப்­பாணம் மாவட்­டத்தில் 529229 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 7பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 150 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 60 வேட்­பா­ளர்­க­ளு­மாக 210 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

வன்னி

வன்னி மாவட்­டத்தில் 253058 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 6 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 162 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 90 வேட்­பா­ளர்­க­ளு­மாக 252 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

மட்­டக்­க­ளப்பு

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 365167 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 5 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 128 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 240 வேட்­பா­ளர்­க­ளு­மாக 368 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

திகா­ம­டுல்லை

திகா­ம­டுல்ல மாவட்­டத்தில் 465757 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 7 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 140 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 170 வேட்­பா­ளர்­க­ளு­மாக 310 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

திரு­கோ­ண­மலை

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 296852 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 4 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 105 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 42 வேட்­பா­ளர்­க­ளு­மாக 147 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

குரு­ணாகல்

குரு­ணாகல் மாவட்­டத்தில்1266443 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 15பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 216 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 252 வேட்­பா­ளர்­க­ளு­மாக 468 பேர் தேர்­த­லில்­க­ள­மி­றங்­கி­யுள்­ளனர்.

புத்­தளம்

புத்­தளம் மாவட்­டத்தில் 553009 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 8 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 132 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 132 வேட்­பா­ளர்­க­ளு­மாக 264 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

அனு­ரா­த­புரம்

அனு­ரா­த­புரம் மாவட்­டத்தில் 636733 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 9 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் 10 அர­சியல் கட்­சிகள் மற்றும் 11 சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 242 வேட்­பா­ளர்­களும் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

பொலன்­ன­றுவை

பொலன்­ன­றுவை மாவட்­டத்தில் 307125 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 5 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 56 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 32 வேட்­பா­ளர்­க­ளு­மாக 88 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

பதுளை

பதுளை மாவட்­டத்தில் 620486 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 8 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 99 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 66 வேட்­பா­ளர்­க­ளு­மாக 165 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

மொன­ரா­கலை

மொன­ரா­கலை மாவட்­டத்தில் 339797 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 5 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 80 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 16 வேட்­பா­ளர்­க­ளு­மாக 96 பேர் தேர்­தலில் குதித்­துள்­ளனர்.

இரத்­தி­ன­புரி

இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் 810082பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 11 பிர­தி­நி­திகள் ்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 11 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 196 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 84 வேட்பாளர்களுமாக 280 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

கேகாலை

கேகாலை மாவட்டத்தில் 649878 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 9 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 156 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 72 வேட்பாளர்களுமாக 228 பேர் இந்த மாவட்டத்தில் களமிறங்கியுள்ளனர்.

இன்று நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குமே பாரிய போட்டி நிலவுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியி்ன் குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இரண்டு கட்சிகளினதும் பிரசாரக் கூட்டங்களை தலைமையேற்று நடத்தினர்.

2010 பாராளுமன்றத் தேர்தல்

கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 144 ஆசனங்களை பெற்றிருந்ததுடன் ஐக்கிய தேசிய கட்சி 60 ஆசனங்களை தனதாக்கிகொண்டது. மேலும் ஜனநாயக தேசியக் கூட்டணி 7 ஆசனங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 14 ஆசனங்களை பெற்றிருந்தன.

முன்னைய தேர்தல்கள்

1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் பிரகாரம் இது எட்டாவது பாராளுமன்றத்துக்கான தேர்தலாகும். 1982 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தை தொடர்ந்து நீடிப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் 1989, 1994, 2000, 2001, 2004, 2010 ஆண்டுகளில் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன.