சகோதரருக்காக தேர்தல் சட்டங்களை மீறிய இருவர் கைது!!

682

ARREST_2540291bரம்புக்கன – தொபேமட கனிஷ்ட வித்தியாலய தேர்தல் மத்திய நிலையத்திற்கு அருகில் தேர்தல் சட்டங்களை மீறியதாக கூறப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 08.00 மணியளவில் இம்முறை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் இலக்கம் அடங்கிய அட்டைகளை விநியோகித்த போதே இவர்கள் கைதாகியுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை சந்தேகநபர்கள் குறித்த வேட்பாளரின் சகோதரர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் வசம் இருந்து பெருந்தொகை அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.