பாகிஸ்­தானில் தற்­கொலைக் குண்டுத் தாக்­குதல்!!

483

pakistan_11பாகிஸ்­தா­னிய பஞ்சாப் மாகாண அமைச்­சரின் அர­சியல் அலு­வ­லகம் மீது ஞாயிற்­றுக்­கி­ழமை நடத்­தப்­பட்ட தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தலில் மாகாண அமைச்சர் உட்­பட குறைந்­தது 10 பேர் பலி­யா­ன­துடன் 25 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

தாக்­குதல் இடம்­பெற்ற வேளை அந்த அலு­வ­லகக் கட்­ட­டத்தில் மாகாண உள்­துறை அமைச்­ச­ரான சுஜா கன்­ஸடா கூட்­ட­மொன்றில் பங்­கேற்­றி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அத்தோக் பிராந்­தி­யத்தில் ஷாடி கான் கிரா­மத்தில் இடம்­பெற்ற மேற்­படி தாக்­கு­தலால் இடிந்து விழுந்த இடி­பா­டு­களின் கீழ் உள்­துறை அமைச்­சரும் ஏனைய பலரும் சிக்­கிக்­கொண்­டுள்­ளனர்.

இடி­பா­டு­களின் கீழி­ருந்து இது­வரை சுஜா கன்­ஸ­டாவின் சடலம் உட்­பட 10 பேரின் சட­லங்கள் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக ராவல்­பிண்டி ஆணை­யாளர் சயீத் தெரி­வித்தார்.மீட்பு நட­வ­டிக்­கை­களில் இரா­ணு­வத்­தி­னரும் பொது­மக்­களும் ஈடு­பட்­டுள்­ளனர்.

இந்தத் தாக்­கு­த­லுக்கு எந்தவொரு குழுவும் இதுவரை உரிமை கோரவில்லை என்ற போதும் பிரிவினைவாதிகளே காரணம் என நம்பப்படுகிறது.