இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் ரங்கன ஹேரத் டெஸ்டில் போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களின் வரிசையில் 3ஆவது இடத்தை பிடித்தார்.
இலங்கை -இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி யில் இலங்கை அணி அபாரமாக வெற்றியீட்டியது.
இப்போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தவர் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்.
37 வயதான அவர் 48 ஓட்டங்களைக் கொடுத்து 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி இந்திய துடுப்பாட்ட வீரர்களை நிலை குலைய வைத்தார். இந்த 7 விக்கெட்டுக்கள் மூலம் ஹேரத் டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களில் 3ஆவது இடத்தை பிடித்தார்.
அவர் 61 டெஸ்ட் போட்டி களில் 270 விக்கெட்டுக்களை வீழ்த்தி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஹேரத் இந்திய வீரர் பிஷன்சிங் பேடியை முந்தினார். இவர் 67 டெஸ்ட் போட்டிகளில் 266 விக்கெட்டுக்களை சாய்த்துள்ளார்.
டெஸ்ட் போட்டியில் இடதுகை சுழற்பந்து வீரர்கள் அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றியவர் நியூஸிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் டேனியல் வெட்டோரி.இவர் 113 டெஸ்ட் கிரிக் கெட் போட்டிகளில் விளையாடி 362 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இரண்டாவது இடத்தில் இங்கிலாந் தின் டெரிக் அன்டர்வுட் உள்ளார். இவர் 297விக்கெட்டுக்களை வீழ்த்தியுள் ளார்.





