கண்ணை கவனியுங்கள்!!

346

eye_0நாம் உண்ணும் உணவில் இருந்து கண் பாதுகாக்கப்படுகின்றது. ஒமேகா 3, லூயூடின், ஸிங்க், விற்றமின் ஏ,சி நிறைந்த உணவுகள் கண் பார்வைத் திறன் குறைபாட்டினை நீக்கும்.

கீரை வகைகள், பச்சை காய்கறிகள். மீன், முட்டை, விதை வகைகள் மற்றும் சைவ புரத வகைகள், ஆரஞ்சு மற்றும் விற்றமின் சி நிறைந்த பழங்கள் போன்ற உணவுகளை உண்ணுவதன் மூலம் கண்ணுக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும்.

வெய்யிலில் செல்லும் 5 போது கண்களை பாதுகாக்க தரமான கறுப்பு கண்ணாடிகளை பயன்படுத்துங்கள். தொழிற்சாலைகளில் நெருப்பு, மின்சாரம் அருகில் வேலை செய்யும் போது அதற்கேற்ற கண்ணாடிகளை அணியுங்கள்.

கணனி முன் வைத்த கண் எடுக்காது பல மணி நேரம் அமர்ந்திருப்பதை தவிர்த்து 20 நிமிடங்களுக்கொரு ஒரு முறை, ஒரு நிமிடம் சுமார் 20 அடி தள்ளி இருக்கும் எதனையாவது சாதாரணமாகப் பாருங்கள்.

இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை 15 நிமிடம் கண்களை கைகளால் பொத்தி ஓய்வு கொடுங்கள்.

கண்களை 2 வருடங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்து, கண்ணாடியை 5 வருடத்திற்கு ஒருமுறை செக் செய்து கொள்ளுங்கள். புகை பிடிப்பதால் இளம் வயதிலேயே கண்ணில் புறை, கண் நரம்பு பாதிப்பு, தேய்மானம் ஆகியன ஏற்படுகின்றது.

சர்க்கரை நோயாளிகளுக்கு கண் திரை பாதிக்கப்படுகின்றது. இதனால் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைப்பது சிறந்தது