சிறைச்­சா­லைக்குள் பெரு­ம­ளவு போதை­வஸ்தை கடத்­திய புறா!!

320

birdசிறைச்­சா­லை­யொன்­றுக்குள் போதை­வஸ்தைக் கடத்­திய புறா­வொன்று அந்த சிறைச்­சாலைக் காவ­லர்­க­ளிடம் வச­மாக சிக்­கிய சம்­பவம் கொஸ்தா றிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.

போதை­வஸ்து சகிதம் சான் ராபயல் டி அல­ஜு­யலா நக­ரி­லுள்ள லா றிபோர்மா சிறைச்­சா­லைக்குள் பிர­வே­சித்த மேற்­படி புறாவைப் பிடித்த சிறைச்­சாலைக் காவலர்கள் அதனை காவலில் வைத்­துள்­ளனர்.

அந்தப் புறாவின் மார்பில் இணைக்­கப்­பட்­டி­ருந்த பிளாஸ்டிக் பையில் சுமார் 14 கிராம் நிறை­யு­டைய கொக்­கேயின் போதைப்­பொருள் மற்றும் அதே நிறை­யு­டைய கஞ்சா போதைப் பொருள் என்­பன இருந்­துள்­ளன. அந்தப் போதைப்­பொ­ருட்­களின் பெறு­மதி 180 ஸ்ரேலிங் பவு­ணாகும்.மேற்­படி புறா­வுக்கு செய்தி களைக் காவிச் செல்வதற்கு பயிற்று விக்கப்பட்டுள்ளது.