சர்வதேச சைக்கிள் போட்டியில் பதக்கம் வென்றார் ஆர்யா!!

738

arya-wins-the-medal-at-the-vtternrundan-cycling-race-photos-pictures-stillsஸ்வீடன் நாட்டில் நடந்த சர்வதேச சைக்கிள் ஓட்டும் போட்டியில் நடிகர் ஆர்யா பதக்கம் வென்றார்.நடிகர் ஆர்யா கால்பந்து, சைக்கிள் ஓட்டும் போட்டிகளில் அதிக ஆர்வம் கொண்டவர். ஸ்வீடன் நாட்டில் உள்ள மோட்டாலா நகரில் நடைபெறும் ‘வாடேர்ன் ருன்டன்’ சைக்கிள் பந்தயம் வெகு பிரபலமானது. 50வது ஆண்டாக இந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்த போட்டியில் பங்கேற்க பட பிடிப்பு வேலைகள் அதிக காணப்பட்ட போதும் நடிப்புக்கிடையே கடந்த 8 மாதங்களாக நடிகர் ஆர்யா பயிற்சி பெற்று வந்தார்.

இந்நிலையில் 300 கிலோ மீட்டர் தூரம் கொண்ட அந்த சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்ட ஆர்யா 15 மணி நேரத்தில் பந்தய தொலைவை கடந்து பரிசு வென்றார். அபாயகரமான வளைவுகள், ஏரிகள், குளங்கள், மலைகள், எதிர் எதிர்காற்று போன்ற அபாயங்களை கடந்து ஆர்யா இந்த சாதனையை படைத்துள்ளார்.

தனது வெற்றி குறித்து நடிகர் ஆர்யா கூறுகையில்,, வாடேர்ன் ருன்டன் சைக்கிள் பந்தயத்தில் பதக்கம் வென்றுவிட்டேன். என் கனவை நனவாக்கிய முருகப்பா குழுமத்தை சேர்ந்த டிஐ சைக்கிள் அருண் அழகப்பனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் நான் இந்த பந்தயத்தில் வெற்றி பெற உதவிய அனைவருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன் என்றார்.