வவுனியாவில் பரபரப்புடன் விருப்பு வாக்கு எண்ணும் பணி : சில மணித்தியாலங்களில் முடிவு!!(படங்கள்)

938

வவுனியா மாவட்டச் செயலகத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறைவடைந்து விருப்பு வாக்குகள் என்னப்படவிருந்த நிலையில் சற்றுமுன் கிடைத்த தகவல்களின்படி குறித்தவொரு வாக்கெண்ணும் அறையில் வாக்குகளை மீள எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவரின் அதிருப்தி தெரிவித்ததின் பேரிலேயே குறித்த அறையில் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டு வருகிறது. இதனால் விருப்பு வாக்கு எண்ணும் பணிகள் சற்று நேரம் தாமதமடையலாமென தெரிவிக்கப்படுகிறது.

ஓரிரு மணித்தியாலங்களில் வவுனியா மாவட்டச் செயலகத்திலிருந்து வன்னித் தேர்தல் தொகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்டோர் விபரம் வெளியாகும் என வவுனியா மாவட்டச் செயலகத்திலிருந்து எமது விசேட செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தொடர்ந்து தேர்தல் தொடர்பான முடிவுகளைத் தெரிந்துகொள்ள வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.

image-0fd4e0d83adf724891296bce69402a1f2661b5928ab253a18c77dc599b64bed9-V image-3fa8b552d47e481c577a0eb12114f67c951e2d3ddb17a1e942db9c31ba585df7-V image-5f38ec59eb3d99106844a1fb974436637467a1b974142b4a361b1e664ab36a10-V image-2764c207fd3845d3ffe0fa41b7bb509d526ec1d86a9147e213366f8dada2e99a-V image-94862e673f90805bc93fbadd1154f0819300e640cd20c12eb8e2ed6760d90cd3-V image-a7b0bc241f57e7b89bf3c4e40579161640fc7e00157b1806ebb145b000dcc523-V image-f9b57251a856e4a5260b79a0e61e5bb7168a7675ff3c38422e7d282d64262ccc-V image-fdb4f0e1e96c312b834ac65652f7c8687a86fce654105fa49cfd397aa05e847c-V