இந்திய குடியரசுத் தலைவரின் மனைவியின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி!!

994

moadi_1இந்தியக் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுர்வா முகர்ஜியின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.இந்தியக் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுர்வா முகர்ஜி தனது 74 வயதில் நேற்று மரணம் அடைந்தார்.

குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுர்வாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் டெல்லியில் உள்ள ஆர்.ஆர். மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சவ்ராவின் நிலைமை மிகவும் மோசமடைந்தது. அவரைக் காப்பாற்ற வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காத நிலையில் நேற்று செவ்வாய்கிழமை காலை 11 மணி அளவில் அவருடைய உயிர் பிரிந்தது.

சுர்வாவின் உடல் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இறுதி அஞ்சலிக்காக குடியரசுத்தலைவர் மாளிகையில் நேற்று மாலை 5 மணி வரை வைக்கப்பட்டிருந்தது.

சுர்வாவின் உடலுக்கு பிரதமர் நரேந்திரமோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் தல்கதோராவில் உள்ள பிரணாப்முகர்ஜியின் மகனும் எம்.பி.யுமான அபிஜித் முகர்ஜி வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதேவேளை, இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜின் மனைவி சுர்வா முகர்ஜியின் உடலுக்கு அதிகளவானோர் அஞ்சலி செலுத்தினர்.