இந்தோனேசியாவின் மலைப் பிராந்தியத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளான திறைகனா விமானசேவை விமானத்தில் பயணம் செய்த 54 பேரினதும் சடலங்கள் மீட்புப் பணியாளர்கால் மீட்கப்பட்டுள்ளன.
பகுதியாக எரிந்து முழுமையாக அழிவடைந்திருந்த அந்த விமானத்தின் சிதைவை தாம் கண்டுபிடித்துள்ளதாக மேற்படி மீட்புக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
அந்த விமானத்தில் 44 வயதுவந்தவர்களும் 5 சிறுவர்களும் 5 விமான ஊழியர்களும் பயணித்துள்ளனர். அத்துடன் மேற்படி விமானத்தில் 486,000 அமெரிக்க டொலர் பெறுமதியான சமூகப் பணிகளுக்கான பணமும் எடுத்துச் செல்லப்பட்டிருந்தது.





