பலவிதமான தடைகளை கடந்த வெள்ளியன்று வெளியாகி வெற்றிகரமாக தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் சிம்புவின் ´வாலு´ சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் சிம்பு, இயக்குனர் விஜய் சந்தர் உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
இந்த பிரஸ்மீட்டில் ´நயன்தாராவுக்கும், ´நானும் ரவுடிதான் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் என்று கூறப்பட்டு வரும் நிலையில், இது உண்மையாக இருந்தால் உங்கள் நிலை என்னவாக இருக்கும் என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்த சிம்பு, “ஒருவேளை அது உண்மையாக இருந்தால் ´நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தை நானே முன்னின்று நடத்தி வைப்பேன்´ என்று கூறினார்.
மேலும் தனக்கு எதிர்காலத்தில் திரைப்படங்களை இயக்கும் எண்ணம் உள்ளது என்றும், அவ்வாறு இயக்குனர் ஆனால் ´தல அஜீத் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் படங்களை இயக்க விருப்பம்´ என்றும் சிம்பு கூறியுள்ளார்.





