வவுனியா ஓமந்தை வேப்பங்குளம் ஸ்ரீநாகபூசணி அம்மன் ஆலயத்தில் அம்மன் உருவம் தெரிவதாக தெரிவிக்கப்படுகிறது
வவுனியா ஓமந்தைப் பகுதியில் வசித்து வரும் அரச ஊழியர்களால் அப்பகுதியில பொதுக்காணியில் உள்ள வேப்பம்மரத்தின் கீழ் கடந்த யூன் மாதம் 19ம் திகதி முதல் சிலை ஒன்றை வைத்து 41 நாட்கள் பொங்கல் வழிபாடு செய்து வழிபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை குறித்த ஆலயத்திற்கு காலை 6.30 மணியளவில் பூசை செய்யவதற்கு சென்றபோது கல்லில் அம்மன் உருவம் பிரகாசமாக தெரிந்தள்ளதாகவும் பின்னர் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து பலர் அங்கு வந்து வழிபட்டுச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.