
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வன்னியில் இருந்து 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக சாள்ஸ் நிமலநாதன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வைத்திய கலாநிதி சிவமோகன் ஆகியோரும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ரிசாட் பதுயுதீன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக கே.கே.மஸ்தான் ஆகியோர் இம்முறை வன்னி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றம் செல்லவுள்ளனர்.
நேற்று மாலை இவர்களின் தெரிவை வவுனியா மாவட்ட அதிபர்
உத்தியோகபூர்வமாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து சிவசக்தி ஆனந்தன், வைத்திய கலாநிதி சிவமோகன், ரிசாட் பதுயுதீன், கே.கே.மஸ்தான் ஆகியோர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியினை கீழுள்ள காணொளியில் காணுங்கள்.
-பிராந்திய செய்தியாளர்-





