புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட சீனா தயார்!!

479

Chinese_flag_(Beijing)_-_IMG_1104புதிய அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. ரணில் விக்ரமசிங்க தலைமையில் வெற்றியடைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், புதிய அரசாங்கத்தின் தலைமையில் இலங்கையின் பொருளாதாரம் உயர் வளர்ச்சியை நோக்கி நகர்ந்துள்ளதாக சீனா நம்புவதாக தெரிவித்துள்ளது.

சீனாவின் வௌியுறவுத் துறை அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுனின் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் நடைபெற்று முடிந்த தேர்தல் ஒழுங்குமுறையாக மற்றும் அமைதியாக நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனா மற்றும் இலங்கைக்கிடையிலான நீண்ட கால உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு எதிர்பாரப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.