கிளார்க்கை வழியனுப்பும் ஆஷஸ் போட்டி இன்று ஆரம்பம்

246

Michael-Clarkeஅவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணி இங்­கி­லாந்தில் சுற்­றுப்­ப­யணம் செய்து ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளை­யாடி வரு­கி­றது. 5 போட்டி தொடரில் கார்­டிப்பில் நடந்த முதல் டெஸ்டில் இங்­கி­லாந்து 169 ஓட்­டங்­களால் வெற்றி பெற்­றது. லோர்ட்ஸ் மைதா­னத்தில் நடந்த 2ஆவது டெஸ்டில் 405 ஓட்­டங்­களால் வெற்­றி­பெற்று அவுஸ்­தி­ரே­லியா பதி­லடி கொடுத்­தது.

ஆனால் 3ஆவது மற்றும் 4ஆவது டெஸ்ட் போட்­டியில் இங்­கி­லாந்து ஆதிக்கம் செலுத்­தி­யது. பர்­மிங்காம் டெஸ்டில் 8 விக்கெட் வித்தி­யா­சத்­திலும்இ நாட்­டிங் கோம் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 78 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்­திலும்வென்று தொடரை கைப்­பற்­றி­யது.

இரு அணிகள் மோதும் 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் ஓவல் மைதா­னத்தில் இன்று தொடங்­கு­கி­றது. இங்­கி­லாந்தின் ஆதிக்கம் இந்த டெஸ்­டிலும் நீடிக்கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அந்த அணி இந்­தப்­போட்­டியில் வென்று டெஸ்ட் தொடரை 4–1 என்ற கணக்கில் கைப்­பற்றும் ஆர்­வத்தில் உள்­ளது. தொடரை இழந்த அவுஸ்­தி­ரே­லியா தொடர் தோல்­விக்கு முற்­றுப்­புள்ளி வைக்க கடு­மை­யாக போராடும்.

இந்தப் போட்­டி­யோடு சர்­வ­தேச கிரிக்­கெட்­ட­லி­ருந்து ஓய்வு பெறும் ஆஸி. அணித் தலைவர் கிளார்க், ரோஜர்ஸ் ஆகி­யோ­ருக்­காக இந்த டெஸ்ட்டை வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையில் அவுஸ்திரேலியா உள்ளது. இருவரும் இந்த டெஸ்டோடு ஓய்வு பெறுகிறார்கள்.