ரணில் நாளை பிரதமராக பதவியேற்பு!!

490

Ranil_wickramasingheஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை வௌ்ளிக்கிழமை (21) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவிருப்பதாக கட்சியின் ஊடகப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் ஐதேக கூடிய ஆசனங்களைப் பெற்று வெற்றீயீட்டியிருந்ததுடன் ரணில் விகரமசிங்க அதிக விருப்பு வாக்குகளையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.