அரபி மொழியில் வெளியாகும் ஐஸ்வர்ய ராய் படம்!!

523

307343-aishநீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள படம், ஜாஸ்பா. சஞ்சய் குப்தா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் இர்பான் கான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்திப் படங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எனப்படும் அரபு நாடுகளில் வெளியாவது வாடிக்கை. ஆனால், அவை இந்தி மொழியில்தான் வெளியாகும். ஜாஸ்பாவை அரபி மொழியில் மொழிமாற்றம் செய்து ஓமன், கத்தார், ப்ரைன், குவைத், அவுதி அரேபியா போன்ற நாடுகளில் வெளியிடுகின்றனர். ஈராக், ஜோ‌ர்டான் நாடுகளில் திரையிடவும் முயற்சிகள் நடக்கின்றன.