துருக்கிய வீரரிடமிருந்து ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பறிப்பு!!

428

1439882189-9093லண்டனில் கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்த துருக்கிய வீராங்கணையிடமிருந்து பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது.

அந்தப் போட்டியில் மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் வென்ற அஸ்லு செக்கிர் அல்ப்டெகின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டபோது, அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவருக்கும் சர்வதேச தடகள சம்மேளனமான ஐஏஏஃப்க்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டுக்கு தாங்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக, விளையாட்டுத் துறைக்கான அதியுயர் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

ஊக்க மருந்து பயன்படுத்தியிருந்தது தெரிய வந்ததை அடுத்து, தடகளப் போட்டிகளில் பங்குபெற அவருக்கு எட்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் அவரது வெற்றிகள் அனைத்தும் செல்லுபடியாகாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் 2012ஆம் ஆண்டு வென்ற ஐரோப்பியச் சாம்பியன் பட்டமும் அடங்கும்.