பாடகியாகும் த்ரிஷா!!

309

TRISHAநாயகி படத்தில் கதையின் நாயகியாக நடிக்கவிருக்கும் த்ரிஷா அப்படத்தில் பேயாகவும் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடிக்கிறாராம்.

கதை 1980 மற்றும் 2015 களில் நடப்பது போல் அமைக்கப்பட்டிருக்கிறதாம்.1980 களில் நடிக்கும் கேரக்டருக்கான லுக் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கிறதாம். அது சஸ்பென்ஸ் என்றும் தெரிவித்திருக்கிறார் த்ரிஷா.

மேலும் இப்படத்தில் இடம்பெறும் ஒரு ப்ரமோஷன் பாடலுக்கு பின்னணியாக பாடவும் இருக்கிறார் என்று படத்தின் இசையமைப்பாளர் ரகு குஞ்சு தெரிவித்தார். இதன் மூலம் பின்னணி பாடும் நடிகைகளின் வரிசையில் த்ரிஷா இணைகிறார்.

அண்மையில் தூங்காவனம் படத்தின் டப்பிங்கின் போது எப்படி பேசவேண்டும் என்று இவருக்கு கமல் ரியுசன் எடுத்தது குறிப்பிடத்தக்கது.