மெக்சிகோவில் முதலைக்கு நடந்த விசித்திர திருமணம்!!

298

nrm_1405020303-crocodile-620x330மெக்சிகோவில் அதிக அறுவடை வேண்டி சான் பெட்ரோ நகர மேயர் பாரம்பரிய வழக்கப்படி முதலையைத் திருமணம் செய்துகொண்டார். தெற்கு மெக்சிகோவின் கடற்கரை நகரமான சான் பெட்ரோவில் அதிக மீனவர்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் கடல் உணவு சார் தொழிலையே இந்நகர மக்கள் நம்பியிருக்கின்றனர்.

பழங்குடி மக்களான இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களுக்கு அதிக கடல் உணவுப் பொருட்கள் கிடைப்பதற்காக நகர மேயருக்கும் ஒரு முதலைக்கும் திருமணம் செய்து வைப்பது வழக்கம். இந்த ஆண்டும் வழக்கப்படி முதலை மணமகளை நகர மேயர் ஜோயல் திருமணம் செய்துகொண்டார். முன்னதாக அந்நகர பொதுமக்கள் மேளதாளத்துடன் முதலை மணமகளை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.