மாகாணசபை உறுப்பினர்கள் 46 பேர் பாராளுமன்றதிற்கு தெரிவு!!

523

Parliment

நடந்து முடிந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மாகா­ண­ச­பை­களில் அங்கம் வகிக்கும் உறுப்­பி­னர்கள் 46 பேர் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர்.

மேல் மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் 12 பேர் இம்­முறை பாரா­ளு­மன்றம் செல்­கின்­றனர். மேல் மாகாண சபையின் மூன்று மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் உத­ய­கம்மன்பில, ஹிரு­ணிகா பிரே­மச்­சந்­திர, முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரிக்கார், மனோ கணேசன் ஆகியோர் பாரா­ளு­மன்றம் செல்­வ­தற்கு மக்­க­ளினால் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர்.

அத்துடன் முத­ல­மைச்சர் பிர­சன்ன ரண­துங்க மற்றும் நிமல் லன்சா, சிசிர ஜயக்­கொடி, ஹர்­ஷன ராஜ­க­ருணா, எட்வட் குண­சே­கர, கவிந்து ஜய­வர்த்­தன பியல் நிஷாந்த ஆகியோர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர்.

தென் மாகா­ண­ச­பை­யி­லி­ருந்தும் ஐந்து உறுப்­பி­னர்கள் இம்­முறை பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர். கீதா குமா­ர­சிங்க, பந்­துலால் பண்­டா­ர­கொட, விஜ­ய­பால ஹெட்­டியா­ராச்சி, காஞ்­சன விஜ­ய­சே­கர மற்றும் நிஹால் கல­பத்தி ஆகியோர் தென்­மா­கா­ண­ச­பை­யி­லி­ருந்து பாராளுமன்­றத்­திற்கு செல்­கின்­றனர்.

மத்­தி­ய­ மா­கா­ண­ச­பை­யி­லி­ருந்து ஆறுபேர் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர். அநுராத ஜய­ரத்ன, லக்கி ஜய­வர்த்­தன மயந்த திஸா­நா­யக்க, எம்.வேலுக்­குமார் உள்­ளிட்டோர் மத்திய மாகா­ண­ ச­பையில் கண்டி மாவட்­டத்­தி­லி­ருந்து பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்யப்பட்டுள்­ளனர். அத்­துடன் மத்­திய மாகா­ண­ச­பை­யி­லி­ருந்து கே. கே. பிய­தாஸ, ரஞ்சித் அலுவி­கார ஆகி­யோரும் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர்.

சப்­ர­க­முவ மாகா­ணத்­தி­லி­ருந்து ஏழு பேர் இம்­முறை பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஹேஷான் விதா­னகே, ஏ.ஏ. விஜ­ய­துங்க, தாரக பால­சூ­ரிய, துஷ்­மந்த மித்திரபால, துஷித்தா விஜ­ய­மான, சுஜித் சஞ்­ஜய மற்றும் சத்தீப் சம­ர­சிங்க ஆகியோர் சப்­ர­க­முவ மாகா­ண­ச­பையின் கேகாலை மற்றும் இரத்­தி­ன­புரி மாவட்­டங்­க­ளி­லி­ருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வடமேல் மாகா­ண­ச­பை­யி­லி­ருந்து ஐவர் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர். வடமேல் மாகா­ண­ச­பையின் குரு­ணாகல் மற்றும் புத்­தளம் மாவட்­டங்­க­ளி­லி­ருந்து தயா­சிறி ஜயசேகர, சனத் நிஷாந்த, எக்டர் அப்­பு­ஹாமி, சாந்த சிசிர அபே­சே­கர, அசோக்க பியந்த ஆகியோர் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர்.

ஊவா மாகா­ண­ச­பையின் பதுளை மாவட்­டத்­தி­லி­ருந்து நால்வர் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்யப்­பட்­டுள்­ளனர். ஹரீன் பெர்­னாண்டோ, சாமர சம்பத், ரவீந்­திர சம­ர­வீர, வடிவேல் சுரேஷ் ஆகியோர் பாரா ­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள னர்.

எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்­திற்கு வட­மத்­திய மாகா­ண­ச­பை­யி­லி­ருந்தும் இருவர் தெரிவு செய்யப்பட்டி­ருந்­தனர். சந்திம மஹிந்தசோம, சிட்னி ஜயரத்ன ஆகியோர் பாராளுமன்றம் செல்கின்றனர்.

கிழக்கு மாகாணசபையிலிருந்து நான்கு உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். விமலவீர திஸாநாயக்க, தயாகமகே, எம்.எம். மன் சூர் மற்றும் இம்ரான் மஹ்ரூப் ஆகியோர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்ப ட்டுள்ளனர்.