
உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் சங்கக்கார டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்களில் 5ஆவது இடத்திலும், அதிக சதம் அடித்தவர்களில் 4ஆவது இடத்திலும், அதிக இரட்டை சதம் எடுத்தவர்களில் 2ஆவது இடத்திலும் உள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக நேற்று தொடங்கிய 2ஆவது டெஸ்ட்போட்டியோடு அவர் ஓய்வு பெறுகிறார்.
சங்கக்காரவின் ஓய்வு இலங்கை அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று இந்திய அணியின் முன் னாள் தலைவரும், இந்திய ‘ஏ’ அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது..
சங்கக்கார உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர். அவரது இடத்தை நிரப்புவது கடினம். அவரும், மஹேலவும் இணைந்து இலங்கை அணிக்கு நீண்ட காலம் விளையாடி பெருமை சேர்த்து இருக்கிறார்கள். சங்கக்காரவின் ஓய்வு இலங்கை அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ராகுல் டிராவிட் டெஸ்ட் ஜாம்பவான்களில் ஒருவர் ஆவார். டெஸ்டில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்களில் 4ஆவது இடத்திலும், அதிக சதம் எடுத்தவர்களில் 5ஆவது இடத் திலும் உள்ளார்.





