இஸ்ரேலுக்காக உளவுபார்த்த டோல்பின் பிடிபட்டது!!

914

Dolphin

இஸ்­ரே­லிய உளவு முகவர் நிலை­ய­மான மொஸாட்டிற்­காக உளவு பார்க்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்ட டொல்பின் ஒன்றைத் தாம் பிடித்­துள்­ள­தாக பலஸ்­தீன ஹமாஸ் அமைப்­பினர் உரிமை கோரி­யுள்­ளனர்.

அந்த டொல்­பினில் புகைப்­ப­டக்­க­ருவி உள்­ள­டங்­க­லாக உளவு பார்ப்­ப­தற்­கான உப­க­ர­ணங்கள் பொருத்தப்பட்டிருந்ததாக அந்த அமைப்பு கூறு­கி­றது.

அந்த டொல்­பி­னுக்கு கடற்­ப­டை­யி­னரால் பயிற்சி அளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அது காஸா துறை­மு­கத்­துக்கு அப்பால் சந்­தே­கத்­துக்கு இட­மான முறையில் காணப்பட்டவேளை தமது இரா­ணுவப் பிரிவால் பிடிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் ஹமாஸ் அமைப்பு கூறு­கி­றது.

தாம் இஸ்­ரே­லுக்­காக உளவு பார்ப்­பதில் ஈடு­பட்­டி­ருந்த உயி­ருள்ள டொல்பின் முலை­யூட்­டியைப் பிடித்­துள்­ள­தாக ஹமாஸ் அமைப்­பினர் கூறு­கின்ற நிலையில், தாம் டொல்­பின்­களைப் பிடிப்­ப­தற்­காக டொல்­பின்கள் போன்று தோற்றமளிக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களையே பயன்படுத்தி வருவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவிக்கிறது.