
தற்போது நடைபெற்றுவரும் இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாம் டெஸ்ட் போட்டியுடன் குமார் சங்கக்கார கிரிக்கட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளார்.
இந்நிலையில் இலங்கையின் நட்சத்திரக் கிரிக்கட் வீரர் சங்கக்காரவின் கடந்த கால சேவைகளை கௌரவிக்கும் வகையில் அவருக்கு தங்க முலாம் பூசப்பட்ட்ட துடுப்பு ஒன்றை பரிசளிக்க இலங்கை கிரிக்கட் சபை தீர்மானித்துள்ளது.
கே. மற்றும் எஸ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள இந்த மட்டையில் நீலகோமேதகக் கற்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டு மில்லியன் ரூபா செலவில் இந்த நினைவுப் பரிசை கிரிக்கட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
தற்போதைக்கு 37 வயதாகும் சங்கக்கார, டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் 11 இரட்டைச் சதங்களை அடித்துள்ளார்.தனது 134வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் களமிறங்கியுள்ள சங்கக்கார, இந்தப் போட்டியிலும் இரட்டைச் சதம் அடித்தால் உலகின் அதிகூடிய டெஸ்ட் இரட்டைச் சதம் பெற்ற டொன் பிரட்மனின் சாதனையை சமப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.





