ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் : முக்கிய உறுப்பினர்கள் நீக்கம்!!

514

UPFA

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களது பெயர் விபரங்கள் தேர்தல்கள் செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களாவன, சரத் அமுனுகம, டிலான் பெரேரா, விஜித் விஜயமுனி சொய்சா, எஸ்.பி.திசாநாயக்க, மஹிந்த சமரசிங்க, லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன,

திலங்க சுமதிபால, அங்கஜன் ராமநாதன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பைசர் முஸ்தபா, ஏ.எச்.எம்.பௌசி, மலித் ஜயதிலக்க ஆகியோர் தேசியப் பட்டியலில் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பொதுத் தேர்தலுக்கு முன்னர் தேர்தல்கள் ஆணையாளருக்கு வழங்கிய சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் இடம்பிடித்திருந்த பிரபல அரசியல்வாதிகள் 11 பேரின் பெயர்கள் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

இதன்படி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், திஸ்ஸ அத்தநாயக்க, ஸ்ரீ ரங்கா, டி.யு.குணசேகர, ரெஜினோல்ட் குரே, ஜீவன் குமாரதுங்க, டிரான் அலஸ், பிரபா கணேசன், பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, பியசிறி விஜேநாயக்க ஆகியோரே இவ்வாறு பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.