15 சிறுமிகளை பலாத்காரம் செய்த காமுகன்!!

542

Abuse

பாகிஸ்தானில் 15 சிறுமிகளை பலாத்காரம் செய்த குற்றஞ்சாட்டப்பட்ட கைதி ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

லாகூர் பகுதியை சேர்ந்தவன் ஹாரூண் (35), லாகூரைச் சேர்ந்த 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டான்.

அவனிடம் விசாரணை செய்ததில் இது போன்று 15 சிறுமிகளை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. எனவே அவனை சி.ஐ.ஏ. (உளவுத்துறை) சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.

இந்நிலையில் அவனை வேறு ஒரு சிறையில் அடைக்க பொலிசார் அழைத்து சென்றனர்.
அப்போது யாரும் எதிர்பாராத நிலையில் பொலிசாரின் துப்பாக்கியை பிடுங்கி தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான்.