அழகை மெருகூட்டிய பெண் திடீர் மரணம்!!

533

Girl

கண்டி அம்பிட்டிய பிரதேசத்தில் 27 வயது இளம் பெண்வொருவர் நேற்று முன்தினம் காலை திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமண நிகழ்வு ஒன்றுக்கு செல்வதற்காக தன் உடல் அழகை மெருகூட்டிக் கொள்வதற்காக தென்னங்கும்புர பிரதேசத்தில் உள்ள அழகுநிலையமொன்றுக்கு சென்று திரும்பிய நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவரது மரணத்துக்கு அழகு நிலையத்தில் உபயோகிக்கப்பட்ட எதேனும் இரசாயனப் பொருள் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகப்படுகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.