புலமைப் பரிசில் பரீட்சை நாளை : மூன்றரை இலட்சம் மாணவர்கள் தோற்றுகின்றனர்!!

592

Scholarship

நாடளாவிய ரீதியில் ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ளது.

மொத்தம் 2907 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் இந்தப் பரீட்சைக்கு மூன்று இலட்சத்தி நாற்பதினாயிரத்து தொள்ளாயிரத்து 26 மாணவர்கள் தோற்றுகின்றனர். பரீட்சை கண்காணிப்பு பணிகளில் 26 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக பரீட்சை நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்கள ஒருங்கிணைப்பு பணிகளில் அரச மற்றும் மாகாண அரச ஊழியர்கள் 560 கடமைக்கு அழைக்கப்டப்டுள்ளனர்.

நாடு தழுவிய ரீதியில் நடபெறும் இந்தப் பரீட்சையில் கடந்த காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மாணவர்கள அதீத திறமைககளை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.