யாழில் இரு சடங்கள் மீட்பு!!

662

Body

யாழில் இரு­வேறு இடங்­களில் இருந்து இரண்டு சட­லங்கள் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் நேற்றுத் தெரி­வித்­தனர்.

குறித்த இரு சட­லங்­களில் ஒன்று வயோ­திபப் பெண்­ணி­னு­டை­யதும் மற்­றை­யது குடும்­பஸ்தர் ஒரு­வ­ரு­டை­ய­து­மென இனங்­கா­ணப்­பட்­டுள்­ளது.

திரு­நெல்­வேலி ஆடி­ய­பாதம் பகு­தியைச் சேர்ந்த சிவ­முத்து கைலாசம் (75) என்ற வயோ­திபப் பெண்ணே சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்ளார்.

இதே­வேளை மீட்­கப்­பட்ட மற்­று­மொரு சடலம் கொட்­டடி 8ஆம் ஒழுங்கை முத்­தம்மன் வீதியைச் சேர்ந்த பூராசா கஜேந்­திரன் (38) மூன்று பிள்­ளை­களின் தந்தை என அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளது.
மீட்­கப்­பட்ட இரு சட­லங்கள் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

குறித்த வயோ­திபப் பெண் வீட்டில் தனி­மையில் இருந்­த­தா­கவும் இவ­ரது பிள்­ளை­களில் ஒருவர் ஆனைக்­கோட்­டை­யிலும் மற்­றைய இருவர் வெளி­நா­டு­களில் வசிப்­ப­தா­கவும் தெரி­ய­வந்­துள்­ளது.

குறித்த சம்­பவம் தொடர்­பாக ஆனைக்­கோட்­டையில் வசிக்கும் அவ­ரது மகள் தெரி­விக்­கையில்,

எமது தாயார் தனி­மை­யி­லேயே குறித்த வீட்டில் வசித்து வந்­துள்ளார். இந்­நி­லையில் நேற்­றுக்­காலை எனது கணவர் அவ­ருக்கு உணவு கொண்டு செல்லும் போதே இச் சம்­ப­வத்தை அவர் அறிந்­தி­ருந்தார்.

எனது தாயா­ருக்கு மனநோய் இருக்­கி­றது . இவர் யாழ்ப்­பாணம் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வந்­துள்ளார். எனவே அவரே தனக்குத் தானே எரித்து தற்­கொலை செய்­தி­ருக்­கலாம். ஏனெனில் இது­போன்றே இந்த மாதம் முதலாம் திக­தியும் 25 நித்­திரை மாத்­தி­ரை­களை உண்­டி­ருந்தார் என்றார்.

குறித்த வயோ­திபப் பென்ணின் சடலம் வீட்­டினுள் பூட்­டிய நிலையில் எரிந்த நிலையில் மீட்­கப்­பட்­டதால் தற்­கொ­லையா அல்­லது கொலையா என்­பது தொடர்பில் தமக்கு சந்­தேகம் உள்­ள­தா­கவும் இச் சட­லத்தை உடற்­கூற்றுப் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­திய பின்­னரே கூற­மு­டியும் என கோப்பாய் பொலி ஸார் தெரி­வித்­தனர்.

இதே­வேளை சட­ல­மாக மீட்­கப்­பட்ட குடும்­பஸ்தர் மது­போ­தை­யினால் வீதி­யுள்ள வாய்க்­கா­லுக்கு வீழ்ந்­த­மை­யினால் மரணம் சம்­ப­வித்­தி­ருக்­கலாம் என யாழ். பொலிஸார் சந்­தேகம் வெளி­யிட்­டுள்­ளனர்.

இந்­நி­லையில் குறித்த இரு சடலங்களும் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேல திக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.