வவுனியா ஊடக நிறுவனத்தில் உள்ளவர்களை மிரட்டியவர் பொலிஸாரால் எச்சரித்து அனுப்பப்பட்டார்!!

539

Capture

வவுனியாவில் அமைந்துள்ள இணையத்தளமொன்றின் அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த ஒருவரை அச்சுறுத்திய நபரொருவரை வவுனியா பொலிஸார் எச்சரித்து அனுப்பிய சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா யாழ் வீதியில் அமைந்துள்ள குறித்த ஊடக நிலையத்திற்கு சென்ற அந்த நபர் வைரவபுளியங்குளத்தில் அத்துமீறி குடியேறியுள்ளவர்களை அகற்றும் நடவடிக்கை தொடர்பான செய்தியை தனக்கு சார்பாக வெளியிடவில்லை என தெரிவித்து அங்கு பணியாற்றிய ஒருவரை அச்சுறுத்தியிருந்ததுடன் அலுவலகத்தையும் தீயிடப்போவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஊடக நிறுவனத்தின் சார்பில் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் அவரை கைது செய்து பின்னர் சமரசனத்தின் அடிப்படையில் எச்சரித்து விடுவித்துள்ளனர்.

எனினும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மெற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.