வவுனியாவில் குளப்பகுதிகளில் வசிப்பவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!!(படங்கள்)

1123

வவுனியாவில் குளப்பகுதியில் வசித்துவருபவர்களை கடந்தவாரம் கமநல சேவைகள் நிலையத்தினர் வெளியேற்றும் நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

இதை ஆட்சேபித்து இன்று காலை வவுனியா அரசாங்க அதிபர் பணிமனைக்கு முன்னால் திரண்டிருந்த நெளுக்குளம், கூமாங்குளம், வைரவப்புளியங்குளம் ஆகிய பகுதிகளில் வசித்துவந்த பொது மக்கள் தமது இருப்பிடத்தினை விட்டு அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன் அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவிகையில் கடந்த 40 வருடகாலமாக குளப்பகுதியினை அண்டி வசித்தவருபவர்கள் தமக்கான வீட்டினையும் அமைத்து அடிப்படை வசதிகளுடன் வாழ்ந்து வரும் எம்மை கடந்த வாரம் கமநல சேவைகள் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களினால் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறு தெரிவித்துள்ளதை ஆட்சேபித்து தமது இருப்பிட உறுதி மற்றும் அரச திணைக்களத்தினால் வழங்கப்பட்ட சான்றிதழ்களுடன் தமது கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்விடயத்தை கவனத்திற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்கி ஆனந்தன் அவ்விடத்திற்கு வருகைதந்ததுடன் அம்மக்களின் பிரச்சினையினை கேட்டறிந்தது அம்மக்களின் பிரதிநிதிகளுடன் வவுனியா மாவட்ட அரச அதிபர் பந்துல ஹரிச்சந்திரவை சந்தித்து மகஜரினை கையளித்து நீண்ட நேரம் பேச்சு நடத்தியதுடன் அரசாங்க அதிபர் காணி உத்தியோகத்தர்களை அழைத்து தற்காலிகமாக இத்திட்டத்தினை நிறுத்திவைக்குமாறு பணித்துள்ளார்.

-பிராந்திய செய்தியாளர்-

P1010488 P1010489 P1010490 P1010491 P1010492 P1010493 P1010494 P1010495 P1010496 P1010497 P1010498 P1010499