சங்காவுக்கு உயர்ஸ்தானிகர் பதவி : ஏற்றுக் கொள்வாரா?

465

ss

பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் பதவியை பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குமார் சங்கக்காரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று குமார் சங்கக்கார பங்கேற்ற இறுதி சர்வதேச டெஸ்ட் போட்டி கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதுடன் நிறைவடைந்தது.

இதனையடுத்து குமார் சங்கக்காரவுக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க மற்றும் இந்திய அணித் தலைவர் விராட் கோலி ஆகியோர் சங்கக்காரவிற்கு பரிசில்களை வழங்கினர்.

இந்த தருணத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “இந்த சந்தர்ப்பத்தில் குமார் சங்கக்காரவுக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பதவியை வழங்க விரும்புகிறோம்.. எனினும் அவர் அதனை ஏற்றுக் கொள்வாரா என்பது தெரியவில்லை..” எனக் குறிப்பிட்டார்.

எனினும் இதனையடுத்து உரையாற்றிய குமார் சங்கக்கார அது தொடர்பில் எந்தவொரு பதிலையும் கூறவில்லை.