2014 ஆம் ஆண்டில் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எச்.ஐ.வி தாக்கத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய தரவுகள் வருமாறு,
இதுவரை 34 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக சுமார் 36.9 மில்லியன் மக்கள் நோய்தொற்றுக்கு உள்ளாகி இருப்பதுடன் 2014 இறுதியில் 2 மில்லியன் மக்கள் நோயினால் பாதிப்படைந்துள்ளனர்.
25.8 மில்லியன் மக்கள் ஆபிரிக்கா சஹாரா பகுதியில் நோய் தொற்றுக்குள்ளாகி இருப்பதுடன் உலக அளவில் ஒப்பிடுகையில் இது 70% ஆகும்.
பெரும்பாலும் எச்.ஐ.வி யானது RDT என்னும் சோதனை மூலம் கண்டறியப்பட்டு சோதனைக்கான முடிவு அதே நேரத்தில் வழங்கப்படுவதுடன் ஆரம்ப சிகிச்சையும் பராமரிப்பும் வழங்கப்படுகின்றது.
தற்போது எச்.ஐ.வி பற்றி 51% மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டில், சுமார் 150 மில்லியன் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பாதிக்கபட்டுள்ளதுடன் 129 குறைந்த, நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் எச்.ஐ.வி பரிசோதனை சேவைகளை பெற்றுவருகின்றன.