வித்தியா வழக்கு – டீ.என்.ஏ பரிசோதனைக்கு அனுமதி!!

515

Vithya1பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட யாழ் மாணவி வித்தியா குறித்த வழக்கின் சந்தேகநபர்களிடம் டீ.என்.ஏ பரிசோதனையை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களினதும் இரத்த மாதிரியை பெற்றுக் கொள்ள அனுமதி கிட்டியுள்ளதாகவும், அவற்றை டீ.என்.ஏ பரிசோதனைக்காக அனுப்பி அது தொடர்பான அறிக்கையை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த வழக்கு மீண்டும் செப்டம்பர் முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.