ஐ.நா அமர்வில் இலங்கைக்கு சார்பாக அமெரிக்கா!!

716

2070651460USஅடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் இலங்கை சார்பான பிரேரணை ஒன்றை ஆதரிக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

போர்க் குற்றங்கள் குறித்து இலங்கையின் உள்ளக விசாரணைப் பொறிமுறைகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக வௌிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் இலங்கை குறித்து பிரேரணைகளை கொண்டு வந்த நாடுகளில் அமெரிக்கா முன்னிலை வகித்ததோடு, இறுதியாக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையில் சர்வதேச விசாரணை அவசியம் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய விசாரணை குறித்து வழங்கிய வாக்குறுதிக்கு அமைய அமெரிக்கா இதற்கு ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்துள்ளதாக, தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.

இதுஎவ்வாறு இருப்பினும் குறித்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து குறிப்பிடாத அவர், இந்தப் பிரேரணை அடுத்த மாதம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ள பிரேரணையை பின்பற்றியதாக இருக்கும் எனவும் கூறினார்.