செய்தி வாசித்துக் கொண்டிருந்த இரு ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொலை!!

895

1283807156TVஅமெரிக்காவில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள், நேரடியாக செய்தி வழங்கிக்கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.அவர்களைத் துப்பாக்கியால் சுட்ட நபரும் பின்னர் தற்கொலை செய்து கொண்டார்.

டபிள்யுடிபிஜே7 என்ற தொலைக்காட்சியைச் சேர்ந்த அலிசன் பார்க்கர் என்ற 24 வயது செய்தியாளரும் அவருடைய ஒளிப்பதிவாளர் ஆடம் வார்ட் என்பவரும் கொல்லப்பட்டிருப்பதாக அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த நிகழ்ச்சி, நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு மர்ம நபர் அவர்களை நோகி, சுமார் 8 தடவை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட வெஸ்டர் ப்ளனாகன்(41) ப்ரைஸ் வில்லியம்ஸ் என்ற பெயரில் WDBJ7 தொலைக்காட்டசியில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த தாக்குதலை தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து, அந்த கொடூர காட்சிகளை தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களிலும் பதிவேற்றியுள்ளார்.இது குறித்து காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.