ரோபோ உப­க­ர­ணங்­களைப் பயன்­ப­டுத்தி புரட்­சி­கர சிறு­நீ­ரக மாற்று அறு­வைச்­சி­கிச்சை!!

310

tec-news_0ரோபோ உப­க­ரணங்­களைப் பயன்­படுத்தி இரு சகோ­த­ரி­க­ளுக்கு அவர்­க­ளது இனவிருத்தி உறுப்­பி­னூடாக சிறு­ நீ­ர­க­மாற்று அறு­வைச்­சி­கிச்­சை­யொன்றை வெற்­றி­க­ர­மாக மேற்­கொண்டு பிரான்ஸ் மருத்­து­வர்கள் சாதனை படைத்­துள்­ளனர்.

இத்­த­கைய அறு­வைச்­சி­கிச்­சை­யொன்று உலகில் மேற்­கொள்­ளப்­ப­டு­வது இதுவே முதல் தட­வை­யாகும்.தோலவுஸ் நக­ரி­லுள்ள பல்­க­லைக்­கழக மருத்­து­வ­ம­னையைச் சேர்ந்த மருத்­து­வர்­களால் இந்த அறு­வைச்­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இந்த அறு­வைச்­சி­கிச்­சையின் போது சிறு­நீ­ரக பாதிப்­புக்கு உள்­ளான பீற்றைஸ் பெரஸ் (43 வயது) என்ற பெண்­ணுக்கு அவ­ரது சகோ­த­ரி­யான வலேரி பெரெஸால் (44 வயது) தானமாக வழங்­கப்­பட்ட சிறு­நீ­ரகம் பொருத்­தப்­பட்­டது.

இதன்­போது சகோ­த­ரிகள் இரு­வ­ருக்கும் ஒரே­ச­ம­யத்தில் அறுவைச் சிகிச்சை மேற்­கொள்­ளப்­பட்டு வலே­ரியின் உட­லி­லி­ருந்து அகற்­ற­ப்பட்ட சிறு­நீ­ரகம் உட­ன­டி­யாக பீற்­றை­ஸுக்கு பொருத்­தப்­பட்­டது.

அறுவைச் சிகிச்­சைக்கு மறுநாள் வலேரி வீடு திரும்பியுள்ளார். அதேசமயம் பீற்றைஸ் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 3 நாட்களில் வீடு திரும்பியுள்ளார்.