சோகத்தில் அசின்!!

305

asin inner 12345தென்னிந்திய சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் அசின்.

இவர் இந்தியில் அமீர் கானுக்கு ஜோடியாக நடித்த கஜினி மாபெரும் வெற்றி பெற்றது.இதை தொடர்ந்து சல்மான் கான், அக்‌ஷய் குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாகி, தமிழ் சினிமாவை மறந்தார்.

ஆனால், காலம் அவருடைய மார்க்கெட்டை பாலிவுட்டிலும் தலைகீழாக்க, தற்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து விட்டார்.

இதனால், கடைசியாக எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்று அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாக ஆல் ஈஸ் வெல் படத்தில் நடித்தார். இப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து படுதோல்வியடைய சோகமாக சினிமாவிற்கு விடை கொடுக்கவிருக்கின்றாராம்.