ஓடும் புகை­யி­ர­தத்தில் விநோத திரு­மணம்!!

333

wedding_0ஜோடி­யொன்று ஓடும் புகை­யி­ர­தத்தில் பய­ணிகள் மற்றும் விருந்­தி­னர்கள் முன்­னி­லையில் திரு­மண பந்­தத்தில் இணைந்த சம்­பவம் அவுஸ்­தி­ரே­லிய பேர்த் நகரில் இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த சனிக்­கி­ழமை இடம்­பெற்ற இந்த திரு­மண நிகழ்வு குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் செவ்­வாய்க்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

மைக்கேல் ஹேவார்ட் என்ற மண­ம­கனும் மெகான் கிரான்ட் என்ற மண­க­ளுமே இவ்­வாறு ஓடும் புகை­யி­ர­தத்தில் திரு­மணம் செய்­துள்­ளனர்.

இந்தத் திரு­ம­ணத்தில் விருந்­தி­னர்­க­ளாக கக­லந்து கொள்ள அந்த ஜோடியின் 30 உற­வி­னர்­க­ளுக்கும் நண்­பர்­க­ளுக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

அவர்கள் அனை­வ­ருக்கும் குறிப்­பிட்ட புகை­யி­ர­தத்தில் ஏறி பேர்த் நகர புகை­யி­ரத நிலை­யத்தை வந்­த­டைய அறி­வு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது.

தாம் புகை­யி­ர­தத்தில் வைத்து திரு­மணம் செய்­ய­வுள்­ளதை அவர்­க­ளுக்கு அறி­விக்­காத அந்த ஜோடி, தாம் வெறு­மனே திரு­மண நிச்­ச­ய­தார்த்தம் மட்­டுமே செய்­ய­வுள்­ள­தாக அவர்­களை நம்ப வைத்­தி­ருந்­தனர்.

இந்­நி­லையில் பேர்த் நகரின் தென்­மேற்­கே­யுள்ள பிரெ­மன்ரில் எனும் இடத்தில் பாரம்­ப­ரிய திரு­மண ஆடை அணிந்து புகை­யி­ர­தத்தில் ஏறிய மைக்கேல் ஹேவார்ட்டும் மெகான் கிரான்ட்டும் திகைப்பில் விழியுயர்த்திய விருந்தினர்கள் மற்றும் பயணிகள் முன்பாக மோதிரங்களை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.