ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த மூதாட்டி!!

691

Lady

​ஜேர்மனியில் உள்ள சாரா ஐகோர்ஸ்தி பகுதியை சேர்ந்த 65 வயதான பெண் ஆனிகிரீட்ரவுனிக். இவருக்கு ஏற்கனவே 13 குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் ஆனிகிரீட் கடந்த ஆண்டு கர்ப்பம் அடைந்தார், அவரை ஸ்கேன் பரிசோதனை செய்த வைத்தியர்கள் அவரது வயிற்றில் 4 குழந்தைகள் இருப்பதை கண்டு பிடித்தனர். இதை அறிந்ததும் ஆனிகிரீட் ஆச்சரியம் அடைந்தார். அவர் போதிய உடல் நலத்துடன் இருந்ததால் 4 குழந்தைகளையும் பெற்றுக்கொள்ள முடிவு செய்தார்.

தேவையான மருந்து மாத்திரைகள், ஆரோக்கியமான ஊட்டச்சத்து உணவு வகைகளையும் சாப்பிட வைத்தியர்கள் ஆலோசனை கூறினார்கள். 4 குழந்தைகளும் வயிற்றில் ஆரோக்கியமாக வளர்வதை வைத்தியர்கள் கண்காணித்தனர்.

இந்த நிலையில் குழந்தைகள் போதிய வளர்ச்சி அடைந்ததும் அவருக்கு சிசேரியன் செய்ய வைத்தியர்கள் முடிவு செய்தனர். அதன்படி சிசேரியன் மூலம் 4 குழந்தைகளையும் ஆனிகிரீட் பெற்றெடுத்தார். ஒவ்வொரு குழந்தைகளும் 2¼ கிலோ எடை கொண்டதாக இருந்தன.

பிறந்ததும் இரண்டு குழந்தைகளுக்கு மூச்சு திணறல் இருந்தது. அந்த குழந்தைகள் வென்டிலேட்டர் உதவியுடன் குணப்படுத்தப்பட்டன. இரண்டு குழந்தைகளுக்கு சத்திர சிகிச்சை செய்யப்பட்டது.

ஆனிகிரீக்குக்கு ஏற்கனவே 10 வயது முதல் 44 வயது வரையுள்ள பிள்ளைகள் உள்ளன. அவர்களில் சிலருக்கு திருமணமாகி 7 பேரக்குழந்தைகளும் உள்ளன. இந்த நிலையில் அவர் 4 குழந்தைகளை பெற்றெடுத்தது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.