வவுனியாவில் காலாவதியான உணவுகளை விற்பனை செய்தவருக்கு 10ஆயிரம் ரூபா அபராதம்!!

825

Vavuniya Court

வவுனியா ஓமந்தைப் பகுதியில் காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும் உணவுப்பண்டங்கள் விற்பனை செய்தவருக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் ரூபா 10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் கைப்பற்றப்பட்ட உணவுப்பண்டங்களை அழித்துவிடுமாறும் உத்தரவிட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் வவுனியா ஓமந்தை பகுதியில் இயங்கி வந்த இரு வர்த்தக நிலையங்களில் காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும் உணவுப் பண்டங்கள் விற்பனை செய்த இரு வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வவுனியா மாவட்ட நீதவான் நிதிமன்றில் ரூபா 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் இரு வர்த்தக நிலையங்களில் கைப்பற்றப்பட்ட ரூபா 8 ஆயிரம் பெறுமதியான உணவுப்பொருட்களையும் அழித்துவிடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

-பிராந்திய செய்தியாளர்-