இலங்­கையில் ஏற்­பட்­டி­ருக்கும் ஆட்சி மாற்றம் சர்­வ­தே­சத்தின் நம்­பிக்­கையை வென்­றெ­டுக்கும் வகையில் அமைந்­துள்­ளது!!

982

imageஇலங்­கையில் ஏற்­பட்­டி­ருக்கும் ஆட்சி மாற்­ற­மா­னது சர்­வ­தே­சத்தின் நம்­பிக்­கை­யினை வென்­றெ­டுக்கக் கூடி­ய­தாக அமைந்­துள்­ளது. எனினும் செப்­டெம்­பரில் வெளி­வ­ர­வி­ருக்கும் ஐ.நா.வின் விசா­ரணை அறிக்கை எவ்­வா­றா­ன­தாக அமையும் என்­பதை எம்மால் கணிப்­பிட்டுக் கூற முடி­யாது. ஆயினும் கடு­மை­யான விதி­களைக் கொண்­ட­தாக அறிக்கை அமை­யாது என்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார்.

இந்த விசா­ரணை அறிக்­கையின் மூலம் மீண்டும் தேசிய விசா­ரணை பொறி­மு­றையை பலப்­ப­டுத்தும் கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­ப­டு­மாயின் உள்­ளக பொறி­மு­றை­களை பலப்­ப­டுத்தி பக்­கச்­சார்பு இல்­லாத, நடு­நி­லை­யான உள்­ளக விசா­ர­ணை­களை நடத்த அர­சாங்கம் தயா­ராக வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அவர் மேலும் கூறு­கையில்,

இலங்­கையில் யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட பின்னர் இலங்­கைக்கும் சர்­வ­தேச நாடு­க­ளுக்கும் இடை­யி­லான உறவில் பாரிய விரிசல் ஏற்­பட்­டி­ருந்­தது. கடந்த பத்து ஆண்­டு­களில் இலங்­கையின் போக்கில் நல்­ல­தொரு மாற்­றத்தை சர்­வ­தேசம் எதிர்­பார்க்­க­வில்லை என்­பதை எம்மால் நன்­றாகவே உண­ரக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

எனினும் கடந்த 2009ஆம் ஆண்டு இலங்­கையை பாது­காக்கக் கூடிய வகையில் ஒரு சர்­வ­தேச தீர்ப்பு அமைந்­தது. அதா­வது இலங்­கையில் நடை­பெற்­ற­தாக கூறப்­படும் போர்க் குற்­றச்­சாட்­டு­களை விசா­ரிக்கும் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு அப்பால் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றை­யினை அமைப்­ப­தற்­கான வாய்ப்பு கிடைத்­தது.

இலங்கை மீதான சர்­வ­தேச விசா­ர­ணைக்கு ஒரு­போதும் நாம் தயா­ரில்லை எனவும் மாறாக இலங்­கையின் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையை உரு­வாக்கி அத­னூ­டாக பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தா­கவும் நாம் வலி­யு­றுத்­தினோம். அதற்­கான கால அவ­காசம் தேவைப்­பட்­ட­தனால் சற்று நீண்ட கால அவ­கா­சத்தை நாம் கேட்­டுக்­கொண்டோம். அதற்­க­மைய ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேரவை எமக்கு இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் கால அவ­காசம் கொடுத்­தி­ருந்­தது.

எனினும் இலங்கை மீதான சர்­வ­தேச அழுத்தம் மிகவும் அதி­க­மா­கவே இருந்­தது. இந்த நிலையில் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் பின்னர் ஏற்­பட்ட மாற்­ற­மா­னது நாட்­டுக்கும் இரா­ணு­வத்­துக்கும் சாத­க­மான வகையில் அமைந்­துள்­ளது. அதா­வது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் மீதான நம்­பிக்கை மற்றும் நாட்டில் ஏற்­பட்­டி­ருக்கும் ஜன­நா­யக மாற்­ற­மா­னது சர்­வ­தே­சத்தை திருப்­திப்­பட வைத்­துள்­ளது. அதன் விளைவே எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் வரையில் இந்த விசா­ரணை அறிக்­கையை பிற்­போட்­டுள்­ள­மை­யாகும்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மீது சர்­வ­தேச நாடுகள் நல்ல நம்­பிக்­கை­யினை வைத்­துள்­ளன. அதன் விளைவே ஆட்சி மாற்­றத்­துடன் சர்­வ­தேசம் எம்­மீ­தான கடு­மை­யான பார்­வையை விலக்கி நல்ல நட்­பு­றவை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றது. பிரித்­தா­னியா, அமெ­ரிக்கா ஆகிய நாடு­களின் ஆத­ரவு இப்­போது எமக்கு கிடைக்க ஆரம்­பித்­துள்­ளது. அதேபோல் ஆசி­யாவின் முக்­கிய நாடு­க­ளான இந்­தியா –சீனா ஆகிய நாடு­களின் நட்­பு­றவை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வென்­றுள்ளார்.

ஆகவே இந்த மாற்­றங்கள் எமது நாட்­டுக்கு நல்ல பலா­ப­லன்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. எனினும் செப்­டெம்­பரில் வெளி­வ­ர­வி­ருக்கும் ஐ.நா.வின் விசா­ரணை அறிக்கை எவ்­வா­றா­ன­தாக அமையும் என்­பதை எம்மால் கணிப்­பிட்டுக் கூற முடி­யாது. ஆயினும் கடு­மை­யான விதி­களைக் கொண்­ட­தாக அமை­யாது என்ற நம்­பிக்கை ஏற்­பட்­டுள்­ளது.

இந்த விசா­ரணை அறிக்­கையின் மூலம் மீண்டும் தேசிய விசா­ரணை பொறி­மு­றையை பலப்­ப­டுத்தும் கோரிக்­கைகள் முன்வைக்கப்படுமாயின் அதுவே எமக்குக் கிடைக்கும் சாதகமான முடிவாகும். அதேபோல் உள்ளக பொறிமுறைகளை பலப்படுத்தி பக்கச்சார்பு இல்லாத, நடுநிலையான உள்ளக விசாரணைகளை நடத்த எமது அரசாங்கம் தயாராக வேண் டும். அதன் மூலம் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையையும் வென்றெடுக்க வேண்டும். அவ்வாறான மிகச்சிறந்த உள்ளக விசாரணை பொறிமு றையை கையாள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.