எதிர்க்­கட்­சி­களை முடக்கும் சதியே தேசிய அர­சாங்கம் : விமல் வீர­வன்ச!!

472

wimal-weerawansaஇலங்கை அர­சி­யலில் எதிர்க்­கட்­சி­களை முடக்கும் சதி நட­வ­டி க்­கை­யா­கவே தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­ப­டு­வ­தாக முன்னாள் அமைச்சர் விமல் வீர­வன்ச குற்றம் சாட்­டி­யுள்ளார். கொழும்பில் நடை­பெற்ற ஊட­க­வி­யலாளர் சந்­திப்­பொன்றின் போதே அவர் இந்தக் குற்­றச்­சாட்டை முன்­வைத்­துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளி­யிட்­டுள்ள விமல் வீர­வன்ச,நல்­லாட்சி பற்றி அர­சியல் கட்­சிகள் மட்­டு­மன்றி, சிவில் சமூக அமைப்­பு­களும், பௌத்த தேரர்­களும் வாய் கிழியப் பேசி­னார்கள்.

ஆனால் இந்­நாட்டின் முற்­போக்குச் சக்­தி­களை முடக்கிப் போடும் வகை­யி­லான அர­சியல் சதி­களை தற்­போ­தைய அர­சாங்கம் முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருக்­கின்­றது.இதன் முத­லா­வது கட்­ட­மா­கவே தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. இது­கு­றித்து யாரும் வாய் திறப்­ப­தில்லை என்றார்.