ஶ்ரீலசு கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடுகிறது!!

475

slfp-logoஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவின் விஷேட கூட்டம் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினர்கள் சிலர் நீக்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி இன்று இடம்பெறும் மத்திய செயற்குழு கூட்டத்தில் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.